பிகார் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்குச் சரியான கல்வி கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களை வச்சு டாய்லெட் சுத்தம் செய்ய வைப்பதும், மிட் டே மீல் (மதிய உணவு) சமைக்க வைப்பதுமான அதிர்ச்சி காரியங்கள் அரங்கேறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள தரவா பகுதியில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி குடியிருப்புப் பள்ளியில்தான் மாணவிகளை இப்படித் தவறான முறையில் வேலை வாங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகளை அழுதுகொண்டே விவரிக்கும் வீடியோ காட்சி இப்போ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
📍कैसे पढ़ें बच्चे, कैसे बदले बिहार📍
अच्छी शिक्षा देने के बजाय स्कूली छात्राओं से टॉयलेट साफ करवाया जा रहा है, मिड डे मील का खाना बनवाया जा रहा है, छात्रा रोते हुए अपनी आपबीती बता रही है।
मामला बिहार गया जिले के तरवां स्थित कस्तूरबा गांधी आवासीय विद्यालय का है, जहां बच्चों से… pic.twitter.com/hH13u4vp3W
— Abhimanyu Singh (@Abhimanyu1305) May 16, 2026
”நாங்க படிக்க வரோமா.. இல்ல இதெல்லாம் செய்ய வரோமா? எப்படிப் படிப்பாங்க குழந்தைகள், எப்படி மாறும் பிகார்?” என்று இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் அம்மாநில கல்வித்துறைக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நல்ல முறையில் கல்வி கற்கச் சென்ற இடத்தில், மாணவிகளின் கண்ணீரோடு வெளியாகி இருக்கும் இந்த அவல நிலை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
