பாத்திரக் கடை ஒன்றில் மூன்று பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரங்களை வாங்கிக் கொண்டிருப்பது போல நைசாகப் பம்மாத்து காட்டியுள்ளனர். கடைக்காரர் மற்றும் அங்கிருந்தவர்கள் கவனிக்காத நேரத்தைப் பார்த்து, அதில் ஒரு பெண் ஒரு பெரிய பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் தனது சேலைக்குள் லாவகமாக மறைத்து வைத்துள்ளார். பின்னர், ஒண்ணுமே தெரியாதது போல பாத்திரத்தை சேலையோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு அங்கிருந்து நைசாக நழுவித் திருடிச் சென்றுள்ளார்.
How Creatively these Ladies Stole Utensils from Shop😭 pic.twitter.com/thaI2hxLr5
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 16, 2026
அங்கிருந்தவர்கள் யாரும் இதை கவனிக்காத நிலையில், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் இந்த பெண்களின் கைவரிசை மொத்தமாக அப்படியே பதிவாகியுள்ளது. தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ காட்சி எக்ஸ் (X) சோசியல் மீடியா தளத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
