திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவின் கே.என்.நேரு, பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். அப்போது வாகனத்தில் இருந்த திமுக பிரமுகர் ஒருவர், கே.என்.நேரு குறித்துப் பேசுகையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினார்.
உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுத தி.மு.க நிர்வாகி… மைக்கை பிடுங்கிய முன்னாள் அமைச்சர் நேரு.!#Trichy | #KNNehru | #DMK | #PolimerNews pic.twitter.com/LSoFy0I33v
— Polimer News (@polimernews) May 16, 2026
இதைக் கண்டு டென்ஷனான கே.என்.நேரு, அந்தப் பிரமுகரின் கையில் இருந்த மைக்கை சட்டென பிடுங்கிவிட்டு, உடனடியாக வாகனத்தைக் கிளப்பக் கூறினார். பிரச்சார வாகனத்தில் நடந்த இந்த பரபரப்பான வீடியோ காட்சி இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
