தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றுவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அவர் தினமும் அலுவலகம் வந்து செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது காவல் துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், முதலமைச்சரின் வாகனப் பயணத்தால் அந்த வழித்தடத்தில் தினமும் பொதுமக்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
#BREAKING | வீட்டை மாற்றுவாரா முதல்வர் விஜய்? #TVK | #Vijay | #CMVijay pic.twitter.com/EV8WK4Dx1l
— PttvOnlinenews (@PttvNewsX) May 14, 2026
“>
இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, தலைமைச் செயலகத்திற்கு மிக அருகிலேயே உள்ள ஒரு வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் குடிபெயர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிறது.
