கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார்.

இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்கிடையே, உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தட்டிக்கேட்டபோது, தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடுவேன் என்றும், கொலை செய்துவிடுவேன் என்றும் உதயகுமார் மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி உதயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.