குளத்தில் அல்லது ஆற்றில் ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென உங்கள் அருகில் ஒரு முதலை வந்தால் உங்கள் ரியாக்ஷன் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்கும் அல்லவா! அப்படி ஒரு தமாஷான பிராங்க் வீடியோதான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாசி படிந்த ஒரு குளத்தில் இரண்டு பேர் ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குளத்தின் கரைக்கு வரும் ஒருவர், கையில் வைத்திருந்த ஒரு போலி முதலையை (பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் ஆனது) அவர்கள் பக்கத்தில் தூக்கிப் போடுகிறார்.
தண்ணீரில் மிதந்து வந்த அந்தப் போலி முதலையைப் பார்த்ததும், நிஜ முதலைதான் என்று நினைத்து அந்த இருவரும் அலறியடித்துக் கொண்டு தண்ணீரில் குதித்து ஓடுகிறார்கள்.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் காட்டும் பதற்றமும், தண்ணீரில் கை கால்களை அடித்துக் கொண்டு ஓடும் விதமும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
This is hilarious 🤣🤣 wait for the end 🤣 pic.twitter.com/sb3EOXx9k2
— HASHi KiONGOZi💰 (@HASHi_KIONGOZi) May 10, 2026
“>
நிஜ முதலை இல்லை என்று தெரிந்த பிறகு அந்த நபர்களின் முகம் எப்படி இருந்திருக்கும் என நெட்டிசன்கள் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
