தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது வைகோவின் வீட்டில் பணிபுரியும் பெண்கள், முதலமைச்சர் விஜய்யைப் பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் உற்சாகமாகப் பேசினர். திடீரென அங்கிருந்த ஒரு பெண், முதலமைச்சர் விஜய்யின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார்.
அம்மா காலுல விழாதீங்க!🥹🥹 pic.twitter.com/AN1QKdgPUJ
— Suresh (@Suresh199104) May 11, 2026
இதனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பதறிப்போன முதலமைச்சர் விஜய், “ஐயோ அம்மா.. கால்ல விழாதீங்க!” என்று கூறி அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினார். பதவிக்கு வந்த பிறகும் சற்றும் கர்வம் இன்றி, ஒரு சாதாரண மனிதராக அவர் நடந்துகொண்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
