உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் டெல்லி ரோட்டில் உள்ள பாலாஜி கோவிலில் வினோதமான திருட்டு ஒன்று அரங்கேறியுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தின் சீருடை அணிந்து, கையில் டெலிவரி பேக் உடன் வந்த ஒரு வாலிபர், பக்தர் போல நைசாகக் கோவில் வாசலுக்கு வந்துள்ளார். யாரும் கவனிக்காத நேரத்தில், அங்கிருந்த குடிநீர் குழாயை (Tap) சில நொடிகளில் கழற்றித் தனது பைக்குள் போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

​இந்தச் சாதுர்யமான திருட்டைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த நபர் திருடிய காட்சிகள் அனைத்தும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, காவல்துறையினர் அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.