சேலம் மாவட்டத்தில் போதையில் ஏற்பட்ட மோதலில் கோகுல் என்ற மாணவர், சக மாணவர்கள் உள்ளிட்ட மூவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். வளர்ந்து வரும் இளைய தலைமுறை போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமூகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதே இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணம் எனச் சாடியுள்ள அவர், புதிதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் போதையை முற்றிலுமாக ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
