ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். மே 10, 2026 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி சிஎஸ்கே விளையாடியது.
அப்போது அதிரடியாக ஆடிய உர்வில் படேல், வெறும் 13 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி சேப்பாக்கம் மைதானத்தையே அதிரவைத்தார். ஆவேஷ் கான் மற்றும் திக்வேஷ் சிங் ரதி ஆகியோரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், ஐபிஎல் வரலாற்றில் முதல் 8 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தவுடன் உர்வில் படேல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். தனது சட்டையிலிருந்து ஒரு குறிப்பை எடுத்து, “இது உங்களுக்காக அப்பா” என்று காட்டி இந்த வெற்றியைத் தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். மொத்தம் 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த அவர், தனது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார்.
A record knock 🤯
A memorable celebration with a 𝗵𝗲𝗮𝗿𝘁𝗳𝗲𝗹𝘁 𝗺𝗲𝘀𝘀𝗮𝗴𝗲 🥹🫶Urvil Patel, thank you for the entertainment today 💛
Updates ▶️ https://t.co/MoXhlWHk4O#TATAIPL | #KhelBindaas | #CSKvLSG | @ChennaiIPL pic.twitter.com/GjR5D2sYid
— IndianPremierLeague (@IPL) May 10, 2026
“>
இந்த 2026 சீசனின் அதிவேக அரைசதமாக இது பதிவாகியுள்ளது. முன்னதாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் 15 பந்துகளில் அடித்ததே இந்த சீசனின் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
