ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய வாழ்வா-சாவா போராட்டத்தில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, அவருக்கு நடுவராக (Umpire) நின்றவர் வேறு யாருமல்ல, 2008-ல் கோலி தலைமையில் இந்தியா அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற போது அந்த அணியில் விளையாடிய தன்மய் ஸ்ரீவஸ்தவா தான்.
During the RCB vs MI match, I found out that umpire Tanmay Srivastava was part of the India U19 team along with Virat Kohli, Jadeja, and many other active players. Crazy how time changes roles in cricket.#RCBvsMI pic.twitter.com/5sLCIBKkLk
— Jitu From Videocon (@JituFromVC) May 10, 2026
அந்த உலகக்கோப்பை தொடரில் 262 ரன்கள் குவித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இவர். சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியாமல் போன தன்மய், 2020-ல் ஓய்வு பெற்று நடுவர் பணியைத் தேர்ந்தெடுத்தார். பிசிசிஐ-யின் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தற்போது ஐபிஎல் வரலாற்றிலேயே விளையாடிய அதே தொடரில் நடுவராகப் பணியாற்றும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Virat ke saath U19 wc jeetne wala Tanmay Srivastava aaj IPL me umpiring kr rha hai. 😐😐 pic.twitter.com/Tum9ifwdCd
— Being Arun (@Paneerbhujia) May 5, 2026
மைதானத்தில் சக வீரராகப் பார்த்த கோலிக்கு, இன்று நடுவராகத் தீர்ப்பு வழங்கும் நிலைக்கு அவர் உயர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
