நெதர்லாந்தில் பணிபுரிந்து வரும் அதிதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அலுவலக கலாச்சாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெதர்லாந்து மக்கள் வேலை நேரத்தை மிகவும் மதிக்கிறார்கள் என்றும், அந்த நேரத்தில் தேவையற்ற கவனச்சிதறல்கள் இன்றி முழு அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வேலை நேரம் முடிந்த அடுத்த நிமிடம், அவர்கள் தங்களை வேலையில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொண்டு, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அங்கு “Work-Life Balance” என்பது வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வியல் முறையாகவே இருப்பதை அதிதி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அங்குள்ள மக்கள் மாலை வீடு திரும்பிய பிறகு அலுவலக மின்னஞ்சல்கள், கூட்டங்கள் அல்லது வேலை தொடர்பான எந்த அழுத்தத்தையும் தங்கள் குடும்ப நேரத்திற்குள் அனுமதிப்பதில்லை. குடும்பம், நண்பர்கள், ஆரோக்கியம் மற்றும் மன அமைதி ஆகியவற்றிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், தன்னை வியக்க வைத்ததாக அதிதி கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by aditi 💌 (@extra_aditi)

“>

இந்த ஆரோக்கியமான கலாச்சாரம் மக்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இந்தியாவில் நீண்ட நேரம் வேலை செய்யும் வழக்கம் உள்ள சூழலில், அதிதியின் இந்த அனுபவம் பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளதுடன், தமக்கும் இத்தகைய வேலைச் சூழல் வேண்டுமென சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.