மகாராஷ்டிரா சிவசேனா மூத்த  தலைவர் சஞ்சய் ராவத், தமிழக அரசியல் சூழல் குறித்து நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத் தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பெரும் கட்சியாக வந்த பிறகும், ஆட்சி அமைக்க விஜய்க்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்று சஞ்சய் ராவத் விமர்சித்தார். ஆளுநரின் இந்தத் தாமதமான முடிவு மற்றும் நிலைப்பாடு முற்றிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து வடமாநிலத் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.