தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதில் நீடிக்கும் இழுபறியால் அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜய் அளித்த கடிதத்தில் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே இருந்ததால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தொழில்நுட்பச் சிக்கலால் விஜய்யின் பதவியேற்பு தள்ளிப்போயுள்ள நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும்; விரைவில் அதிமுக ஆட்சி அமையும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் இந்த மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
