தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், பா.ஜ.க மறைந்த மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பழைய உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1997-ல் அவர் ஆற்றிய அந்த உரையில், இந்திய ஜனநாயகத்தின் சிக்கலான தன்மையை நகைச்சுவையாக விளக்கியிருப்பார்.

“நாங்கள் தான் சபையிலேயே மிகப்பெரிய கட்சி, ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறோம்; ஒரே ஒரு எம்.எல்.ஏ கொண்ட கட்சி ஆட்சியில் இருக்கிறது” என்று அவர் அன்று சொன்னது, தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்கு அப்படியே பொருந்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தாலும், இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.

“>

 

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஒரு ஆட்சியை விஜய் அமைப்பாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிரமோத் மகாஜனின் இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.