ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபடா காட்டில், தேன் சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் ஷிபா பிரதான் எதிர்பாராதவிதமாக இரண்டு ராட்சதப் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டான். அவனது தலை பாறையின் இடுக்கில் பலமாக மாட்டிக்கொண்டதால், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நகர முடியாமல் தவித்திருக்கிறான்.
இதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அடர்ந்த காடு மற்றும் சரிந்து விழும் நிலையில் இருந்த பாறைகளுக்கு இடையே மிகவும் சவாலான நிலையில் மீட்புப் பணியைத் தொடங்கினர்.
சுமார் ஏழு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஹைட்ராலிக் இயந்திரங்கள் மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனர். மீட்புப் பணியின் போது சிறுவன் பயந்துவிடாமல் இருக்க அவனிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்.
A rescue operation is underway near Odagaon in Odisha after a minor boy got trapped between big rocks while collecting honey in the forest.
His head is stuck between the rocks, making the rescue extremely challenging.
Odisha Fire Services team is working to save him safely. pic.twitter.com/1eNDLvZlM6
— Manas Muduli (@manas_muduli) May 6, 2026
“>
இந்தத் துணிச்சலான செயலைப் பாராட்டிய ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பையும் திறமையையும் வெகுவாகப் புகழ்ந்தார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு உயிரைக் காப்பாற்றப் போராடிய தீயணைப்புப் படையினருக்கு இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
