மும்பை பைதோனி பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல் துறையினர், அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். குறிப்பாக, அவர்கள் உட்கொண்ட தர்பூசணி பழத்தில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடயவியல் ஆய்வக அறிக்கையின்படி, அந்தத் தர்பூசணி மற்றும் உயிரிழந்தவர்களின் உள்ளுறுப்பு மாதிரிகளில் ‘துத்தநாக பாஸ்பைடு’ என்ற வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக விவசாய நிலங்களிலும் தானியக் கிடங்குகளிலும் எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த விஷமாகும்.
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த இந்த வேதிப்பொருள் கலந்த தர்பூசணியைச் சாப்பிட்டதே அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மரணத்திற்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
