மனித உறவுகளின் புனிதத்தையும், பெற்ற தாயின் மதிப்பையும் அடியோடு தகர்க்கும் வகையிலான ஒரு கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தான் பெற்றெடுத்த சொந்த மூத்த மகனே தன் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட தாய் காவல் நிலையத்தில் கண்ணீர்மல்க அளித்த புகார், காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெற்ற பிள்ளைக்கு பாலூட்டி வளர்த்த தாய், அதே மகனால் இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, சமூக சீர்கேட்டின் உச்சகட்டத்தைக் காட்டுவதோடு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்படி, வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, அந்த நபர் பெற்ற தாய் என்றும் பாராமல் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார். இத்தனை காலம் தனது குடும்பத்தின் மானத்திற்குப் பயந்தும், சமூகத்தின் கேள்விகளுக்கு அஞ்சியும் அமைதி காத்து வந்த அந்தத் தாய், மகனின் அத்துமீறல் எல்லை மீறியதைத் தொடர்ந்தே காவல் நிலையத்தின் படிகளையேறத் துணிந்துள்ளார்.
பெற்ற பிள்ளைக்கு எதிராகவே புகார் அளிக்கத் துணிந்த அந்த தாயின் வேதனையும், அவர் அடைந்த மன உளைச்சலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை ஆகும். குற்றவாளியை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயையே தெய்வமாகப் போற்றும் ஒரு சமூகத்தில், சொந்த மகனே தாயின் கற்புக்கு உலை வைக்கும் நிலைக்குச் சென்றிருப்பது, நவீன சமூகத்தின் மனநோயையும் சீரழிவையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டத்தின் முன் எவ்வித சலுகையும் காட்டப்படா கூடாது.
விரைவாகக் கடுமையான தண்டனை வழங்கி முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். பாதிக்கப்பட்ட அந்த தாய்க்குத் தேவையான சட்டரீதியான நீதியும், மனரீதியான ஆறுதலும் கிடைக்க அரசு மற்றும் சமூக நல அமைப்புகள் உறுதுணையாக நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
