சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,13,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15436 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000 விற்பனை செய்யப்படுகிறது.
