நேரம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்கு ஆக்ரா வீதிகளில் சுற்றித் திரியும் டாக்டர் சந்தோஷ் கோயல் ஒரு சிறந்த உதாரணம். இன்று பார்ப்பதற்கு ஒரு சாதாரண முதியவர் போலத் தெரிந்தாலும், இவரது பின்னணி வியக்க வைக்கிறது. 1971-லேயே ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி முடித்த இவர், இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியில்  மூன்று ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இன்று ராணுவத்தில் கர்னல்களாகவும் பிரிகேடியர்களாகவும் இருக்கும் பலருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ‘குரு’ இவர்தான். ஆனால், விதி வசத்தால் இவரது கண் பார்வை பாதிக்கப்பட, ராணுவப் பணியில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 15 ஆண்டுகள் பணியை முடிக்காததால் இவருக்கு ஓய்வூதியமும் கிடைக்கவில்லை.

தற்போது ஆக்ராவின் சுடும் வெயிலில் ஒரு கோவிலின் ஓரத்திலே வசித்து வரும் இவர், தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் சிறிய பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார். பற்கள் இல்லாததால் கடினமான உணவுகளை உண்ண முடியாமல், அங்கிருப்பவர்கள் தரும் மென்மையான உணவுகளைக் கொண்டே பசியாறுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Ajay Kumar (@ajaymisra.irs)

“>

இவ்வளவு வறுமையிலும் இவருக்கு ஆங்கில இலக்கியத்தின் மீதுள்ள பற்று குறையவில்லை. இன்றும் வீதியில் செல்லும் மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், ஆங்கில இலக்கணத்தையும் மிகத் தெளிவாகக் கற்றுத் தருகிறார். ஒரு காலத்தில் அதிகாரிகளுக்குப் பாடம் எடுத்த அந்தப் பேராசிரியரின் இன்றைய நிலை காண்போர் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.