உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி ஏணி உடைந்த விபத்தில், சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு சிறுவர்கள் இந்திய விமானப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமை மதியம் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏணி உடைந்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது, இருவர் காயமடைந்தனர். ஆனால், பவன் மற்றும் கல்லு என்ற இரண்டு சிறுவர்கள் மட்டும் தொட்டியின் உச்சியில் தவித்தனர்.
கனமழை மற்றும் போதிய வசதி இல்லாததால் தரைவழியாக மீட்புப் பணியைத் தொடர முடியாத சூழலில், இரவு முழுவதும் ட்ரோன்கள் மூலம் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்திய விமானப்படையின் ‘எம்ஐ-17 வி5’ ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி தொடங்கியது.
<a href=”http://
On a request from state government authorities, an IAF Mi 17 V5 of Central Air Command (CAC) was deployed to rescue two stranded children, who were stuck on top of a water tank in Sidharth Nagar in Gorakhpur, Uttar Pradesh. The children were stranded in the night as the ladder of… pic.twitter.com/dZ2D4shbQS
— CAC, IAF (@CAC_CPRO) May 3, 2026
“>
வீரர்கள் மிகவும் சவாலான முறையில் அந்த இரண்டு சிறுவர்களையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பத்திரமாக தரை இறக்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவர்களை மீட்ட விமானப்படையின் இந்தத் துணிச்சலான செயலை அப்பகுதி மக்களும் அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர். காயமடைந்த சிறுவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
