ஹைதராபாத்தில் கேப் டிரைவர் ஒருவர் தனது காரில் ஒட்டியுள்ள வினோதமான மற்றும் ஆக்ரோஷமான எச்சரிக்கை நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
அந்த நோட்டீஸில், “நீங்கள் இந்த காருக்கு ஓனர் இல்லை, ஓட்டுபவர் தான் ஓனர்; அதனால் கண்ணியமாகப் பேசி மரியாதையை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று காரசாரமாகத் தொடங்கியுள்ளார்.
மேலும், “கதவை மெதுவாக மூடுங்கள், நீங்கள் ஒன்றும் எங்களுக்கு அதிக காசு கொடுத்துவிடவில்லை, அதனால் உங்கள் ஆட்டிடியூடை உங்கள் பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்” என்றும், தன்னை ‘பையா’ என்று கூப்பிடக் கூடாது என்றும் அந்த டிரைவர் கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.
மிக முக்கியமாக, காரில் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்யக் கூடாது, இது ஒன்றும் உங்கள் பெட்ரூம் இல்லை என்று வார்னிங் கொடுத்துள்ள அவர், “மரியாதை கொடுங்கள், மரியாதையை வாங்குங்கள்” என்று முடித்துள்ளார்.
இந்த போஸ்டரைப் பார்த்த நெட்டிசன்கள், “பாவம் மனுஷன் அந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார் போல” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
