கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆண்டிவேல் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீவ், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக காரின் கதவு உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டதால், வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே சிறுவன் மயங்கி விழுந்துள்ளார் சிறுவனைக் காணவில்லை எனப் பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில், சந்தேகத்தின் பேரில் காரைத் திறந்து பார்த்தபோது சஞ்சீவ் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிய சிறுவன் காருக்குள் சிக்கி உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
