கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிலிருந்து விலகிய இவர், தான் பணியாற்றிய பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து சுரேஷைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது