ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டினர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவிலேயே இந்தியா முழுவதும் பயணம் செய்து, ஒவ்வொரு மாநிலத்தையும் சுற்றிப் பார்த்து இந்த அனுபவத்தை மிகவும் ரசித்து வருகின்றனர்.

ஆனால், நம் ஊரில் கொஞ்சம் பணம் சம்பாதித்த உடனே பலரும் ஏசி கார் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதோடு, பொதுப் போக்குவரத்தையோ அல்லது ஆட்டோவையோ பயன்படுத்த அவமானப்படுகிறார்கள்.

இப்படி சொகுசு வாழ்க்கையைத் தேடி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நாம் தான், வெயில் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றும், வெப்ப அலை ஏன் வீசுகிறது என்றும் பிறகு குறை சொல்லிக் கொள்கிறோம்.

“>

 

எளிமையான பயணத்தை விரும்பும் அந்த வெளிநாட்டினரைப் பார்க்கும் போது, ஆடம்பரத்தை விட இயற்கையோடு இணைந்த வாழ்வே சிறந்தது என்பது நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.