வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு பெரிய குழப்பம் இருக்கும். கையில் இருக்கும் பணத்தை வைத்து கடனை அடைப்பதா? அல்லது அந்தப் பணத்தை முதலீடு (SIP) செய்வதா? இதே கேள்வியை ஒரு நபர் சாட் ஜிபிடியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ஏஐ (AI) கொடுத்த பதில் மிகவும் லாஜிக்காகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. 40 வயதாகும் அந்த நபர், ரூ.1 கோடி ஹோம் லோன் வைத்திருப்பதாகவும், மாதம் ரூ.40,000 எஸ்ஐபி (SIP) செய்து வருவதாகவும் கூறி, “முதலீட்டை நிறுத்திவிட்டு கடனை அடைக்கட்டுமா?” எனக் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த சாட் ஜிபிடி, “முதலீட்டை நிறுத்தாதீர்கள்” என அதிரடியாகக் கூறியுள்ளது.

ஏனென்றால், ஹோம் லோன் வட்டி 9% ஆக இருக்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 10-12% வரை லாபம் தர வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டை நிறுத்தினால் பல கோடி ரூபாய் லாபத்தை இழக்க நேரிடும்.

அதே சமயம் கடனை குறைக்கவே வேண்டாமா? என்றால், அதற்கும் ஒரு ஐடியா கொடுத்துள்ளது. உங்கள் மாத முதலீட்டைத் தொடர்ந்துகொண்டே, உங்களுக்குக் கிடைக்கும் ‘ஆண்டு போனஸ்’ தொகையை மட்டும் கடனைத் திருப்பிச் செலுத்த (Prepayment) பயன்படுத்துங்கள்.

இதனால் கடனும் குறையும், உங்கள் சேமிப்பும் பல கோடியாக வளரும். “கடன் இல்லாத மனிதனாக மாறுவதை விட, செல்வந்தராக மாறுவதே முக்கியம்” என்பதே சாட் ஜிபிடியின் தாரக மந்திரம்!