திருமணங்களில் எப்போதுமே எதிர்பாராத சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ நெட்டிசன்களைப் பயங்கரமாகச் சிரிக்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில், உறவினர்கள் புடைசூழ மணமகன் மேடையில் அமர்ந்திருக்கிறார். அப்போது திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு, நேராக மணமகன் அருகில் வந்து அமர்கிறது.
இதைப் பார்த்த உறவினர்கள் சிரித்தாலும், மணமகன் பயத்தில் உறைந்து போய் அந்தக் குரங்கையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது முகத்தில் தெரிந்த பயம் பார்ப்பதற்கே மிகவும் வேடிக்கையாக உள்ளது.
முதலில் பயந்த மணமகன், பின்னர் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஆனால் அந்தக் குரங்கு விடாமல் மணமகன் தோள் மீது கை போட்டு ஜாலியாக அமர்ந்திருந்தது. ‘ராஜா குரேஷி 7700’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
View this post on Instagram
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சாப்பாட்டுக்குக் குரங்கு கெஸ்ட்டா வந்திருக்கு” என்றும், “மாப்பிள்ளையோட நிலைமையைப் பார்த்தா சிரிப்பா வருது” என்றும் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ‘குரங்கு நண்பனின்’ அட்டகாசம் இப்போது இணையத்தில் செம்ம ட்ரெண்டிங்.
