மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பலத்த காற்று வீசுவதும், பயணிகள் யாரும் உயிர் காக்கும் கவச உடை அணியாமல் இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.
மகிழ்ச்சியாகத் தொடங்கிய அந்தப் பயணம், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதால் சில நிமிடங்களிலேயே கோர விபத்தில் முடிந்துள்ளதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.
இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, முதல்வர் மோகன் யாதவ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், பிரதமர் நரேந்திர மோடி சார்பில் 2 லட்ச ரூபாயும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The loss of lives due to the capsizing of a boat in Jabalpur, Madhya Pradesh, is extremely painful. I extend my condolences to those who have lost their loved ones in this tragic mishap. Praying for the speedy recovery of the injured. The local administration is assisting those…
— PMO India (@PMOIndia) May 1, 2026
“>
விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் முதல்வர் பாராட்டுத் தெரிவித்தார். விபத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
