ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அணில் ஒன்று அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் அந்த அணில் சுமார் 20 பேரை கடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேழும் பொதுவாக அமைதியான விலங்காகக் கருதப்படும் அணிலின் இந்த விசித்திரமான மற்றும் ஆக்ரோஷமான நடத்தையினால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளவர்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
मोहनलाल सुखाड़िया यूनिवर्सिटी गिलहरी का आतंक
राजस्थान में मोहनलाल सुखाड़िया यूनिवर्सिटी के आर्ट्स कॉलेज में एक गिलहरी ने आतंक मचा रखा है. अब तक उसने 18 से 20 स्टूडेंट्स और स्टाफ को काट लिया है.रेस्क्यू टीम के गिलहरी को पकड़ने में पसीने छूट गए है.#Rajasthan #Squirrel #udaipur pic.twitter.com/Czg3Rv6Ju4
— NDTV Rajasthan (@NDTV_Rajasthan) April 30, 2026
“>
இந்தத் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளது. அந்த அணிலுக்கு வெறிநாய்க்கடி போன்ற ஏதேனும் நோய்த்தொற்று இருக்கலாமா அல்லது அதன் இயல்பான நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது அந்த அணிலைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதுவரை மாணவர்கள் அனைவரும் மரங்கள் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
