கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோவில் திருவிழா ஒன்றிற்காக யானை அழைத்து வரப்பட்டிருந்தது. அந்த யானை திடீரென மதம் பிடித்து மிரண்டு ஓடியதால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.

அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த லாரி ஓட்டுநர் ஒருவரை யானை மிதித்துக் கொன்றது.

இந்த கோரமான சம்பவத்தில் யானை பாகன் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாகத் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருவிழா கூட்டத்தில் இந்த கோரச் சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.