சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, காண்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது. வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் பாலத்தின் விளிம்பிற்குச் சென்றுள்ளார்.
அந்த இக்கட்டான தருணத்தில், அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். “மரணத்திற்கும் வாழ்விற்கும்” இடையிலான அந்த சில நொடிகள், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அந்தப் பெண் காவலர் காட்டிய சாமர்த்தியமும், மனிதாபிமானமும் இணையத்தில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
ASSAM 📍
कुछ SECOUND और एक जिंदगी खत्म हो जाती
Gen-G क्या मानसिक रूप से कमजोर हो रही है या
फिर भावनाओं की संभालना भूल रहे हैं।क्या प्यार में धोखा सच में समझदारी को समाप्त कर देता है। pic.twitter.com/RM4CqTMPpX
— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) April 30, 2026
“>
இந்நிலையில் தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல என்பதையும், இக்கட்டான சூழலில் சரியான நேரத்தில் கிடைக்கும் உதவி ஒரு உயிரை எப்படிக் காப்பாற்றும் என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன், அந்த பெண் காவலரின் துணிச்சலான செயலை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
