சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு கிராமத்தில் பலத்த மழை மற்றும் காற்று வீசிக்கொண்டிருந்த போது, ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் இருந்தது.
மேலும் அந்த மரத்திற்கு அடியில் ஒரு எருமை மாடு கட்டப்பட்டிருப்பதை கவனித்த ஒரு பெண், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று அந்த மாட்டை அவிழ்த்து விட முயன்றார். அவர் மாட்டை அவிழ்த்துவிட்டு சில நொடிகள் ஓடி விலகுவதற்குள், அந்த ராட்சத மரம் பெரும் சத்தத்துடன் அவர் நின்றிருந்த இடத்திலேயே விழுந்தது.
उत्तर प्रदेश के प्रतापगढ़ में इंसानियत की मिसाल,
एक बहादुर मां ने कल तूफान के बीच अपनी जान जोखिम में डालकर एक बेजुबान जानवर की जान बचाई।#Humanity #BraveMother #UttarPradesh #Pratapgarh #ViralVideo pic.twitter.com/8G5qM7oUzP— Maharashtra Bandhu News (@BandhuNews_in) April 30, 2026
“>
இந்த சிலிர்ப்பூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் மயிரிழையில் உயிர் தப்பியதைக் கண்டு சமூக வலைதளவாசிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். “மரணத்தின் பிடியிலிருந்து சில வினாடிகளில் தப்பிய அதிசயம்” என்று பலரும் இந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது வளர்ப்புப் பிராணியைக் காப்பாற்ற அந்தப் பெண் காட்டிய துணிச்சலும், அதே சமயம் இயற்கை சீற்றத்தின் போது அவர் எதிர்கொண்ட ஆபத்தும் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணும், எருமை மாடும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.
