ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.
சமீபகாலமாக கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “உண்மையைச் சொல்லப்போனால், வைபவ் விளையாடுவதைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு 15 வயது சிறுவனால் எப்படி இவ்வளவு முதிர்ச்சியுடன் விளையாட முடிகிறது? அவர் ஒரு அபூர்வமான திறமைசாலி. பிசிசிஐ (BCCI) அவரை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். இது போன்ற ஒரு திறமையை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. வைபவ் சூர்யவன்ஷி உண்மையிலேயே ஒரு விதிவிலக்கான வீரர். அவர் எந்தப் பந்துவீச்சாளரைக் கண்டும் அஞ்சுவதில்லை, மைதானத்தில் அனைவரது பந்துவீச்சையும் துவம்சம் செய்கிறார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கில்கிறிஸ்டின் இந்தப் பாராட்டு வைபவ் சூர்யவன்ஷியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
