ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் காட்டிய அதிரடியைப் பார்த்து, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வியந்து போயுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “நீங்கள் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, அதை உடனடியாக அப்படியே போட்டுவிட்டு வைபவ் ஆடுவதைப் பாருங்கள். இவன் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் கிடையாது; வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து வந்தவன் போல ஆடுகிறான்” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Whatever you are doing, drop it right away because this not so earthling is batting and howwwwwww🔥🔥🔥🔥
Vaibhav Suryavanshi pic.twitter.com/64MBt4omS7
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) April 28, 2026
வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் மிகவும் அபாரமானது மற்றும் அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ள அஸ்வின், அவரது ஆட்டத்தைப் பார்ப்பது ஒருவித ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தருவதாகக் கூறியுள்ளார். எவ்வித பயமும் இன்றி உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களை வைபவ் எதிர்கொள்ளும் விதம், ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைப் போல இருப்பதாக அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வின் போன்ற ஒரு மூத்த வீரர், இளம் வீரரான வைபவ்வை “பூமிக்கு அப்பாற்பட்டவர்” (Not so earthling) என்று வர்ணித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், வைபவ் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
