அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற பத்திரிகையாளர் சங்க விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று ஈரான் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது. டிரம்ப் மீதான ஆதரவு குறைந்து வருவதையும், அவருக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் திசைதிருப்பவே இந்த கொலை முயற்சி நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அந்த வீடியோ சித்தரிக்கிறது.

‘லெகோ’ (விளையாட்டு பொம்மைகளை) வைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், டிரம்ப் தனது செல்வாக்கு குறையும் போதெல்லாம் பழைய நாடகங்களையே மீண்டும் நடத்துவதாக ராப் பாடல் மூலம் எள்ளி நகையாடப்பட்டுள்ளது.‌
<a href="http://

“>

ஈரான் ஆதரவு குழு வெளியிட்டுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது இளைஞரை ஒரு “மனநோயாளி” என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். இதற்கு முன்பும் இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் வீடியோக்களை இந்த குழு வெளியிட்டதால், அவற்றை யூடியூப் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈரான் மீதான போர் முடிவு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளால் டிரம்ப் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில், இந்த வீடியோ விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.