உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ஆம் ஆண்டு ரஷியா தொடங்கிய போர் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்ட பல முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இதனால், அமைதி எப்போது திரும்பும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், ரஷியாவிற்குத் தனது முழு ஆதரவை வடகொரியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷியாவிற்குத் தேவையான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை வடகொரியா வழங்கி வருகிறது; பதிலுக்கு வடகொரியாவிற்குத் தேவையான உணவு, எரிசக்தி மற்றும் ராணுவத் தொழில்நுட்பங்களை ரஷியா வழங்கி வருகிறது.

சமீபத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி வடகொரிய அதிபரைச் சந்தித்தது, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கமான உறவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.