இந்திய கிரிக்கெட்டில் புயலை கிளப்பி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைப் பார்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நுமான் நியாஸ் ஒரு வினோதமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த சீசனில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை விளாசிய வைபவ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.

இவரது அதீத சக்தியைக் கண்டு ஆச்சரியமடைந்த நுமான் நியாஸ், “இவரது பேட்டில் ஏதாவது ஏஐ (AI) சிப் இருக்கிறதா என்று ஆய்வகத்திற்கு அனுப்பிச் சோதிக்க வேண்டும்” என கிண்டலாகவும் சர்ச்சையாகவும் பேசியுள்ளார்.

15 வயதிலேயே விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற ஜாம்பவான்களுக்கே டஃப் கொடுத்து வரும் வைபவ், தற்போது ஆரஞ்சு கேப் ரேஸில் 357 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே அண்டர்-19 உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்த இளம் புயல், ஜூன் மாதம் இந்திய அணிக்குத் தேர்வானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கிரிக்கெட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.