மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தனது சகோதரி மற்றும் தாய்மாமனை ஒரு காட்டுப் பகுதியில் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் போபால் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சகோதரர் அவரைத் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றபோது, ஒரு ஒதுக்குப்புறமான காட்டில் தனது தாய்மாமனுடன் அவர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர் இருவரையும்‌ சரமாரியாகத் தாக்கியதோடு, அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும் முயன்றார்.
<a href="http://

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “குடும்ப நம்பிக்கையை இவ்வளவு மோசமாகச் சிதைக்கக் கூடாது” என்று ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “அந்தப் பெண்ணை மூளைச்சலவை செய்த மாமனை இன்னும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

அதே சமயம், ஆத்திரத்தில் அந்த இளைஞர் பொதுவெளியில் அவர்களைத் தாக்கிய விதம் குறித்தும் சிலர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் தற்போது ஊர் முழுக்க விவாதப் பொருளாக மாறியுள்ளது.