திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான நபரை மறுமணம் செய்த பெண் ஒருவர், கணவன் மற்றும் புகுந்த வீட்டினரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் திவேதி என்ற நபரை கடந்த 2025 மே மாதம் அப்பெண் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன், மைத்துனர் சௌரவ் மற்றும் மாமியார் சுதா ஆகியோர் அப்பெண்ணைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவரது முதல்திருமணத்தின் போது கிடைத்த நகைகளையும் சொத்துக்களையும் அவர்கள் பறித்துக்கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மது அருந்திவிட்டு வரும் கௌரவ், மனைவியிடம் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு வைத்துக் கொண்டதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். பல நாட்கள் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேநிற்க வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
பொறுமை இழந்த அப்பெண், தன்னிடம் உள்ள ஆடியோ ஆதாரங்களுடன் காவல்துறையிடம் தஞ்சமடைந்தார். தற்போது காவல்துறையினர் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
