பிரிட்டனின் டான்காஸ்டர் பகுதியில், 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த விஜய் முந்த்ராத்தி என்பவர் மீது எழுந்துள்ள புகார்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தச் சிறுமிக்கு நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுத்த விஜய், “உன்னை நான் கர்ப்பமாக்கிவிட்டால், என்னால் நிரந்தரமாக இங்கிலாந்திலேயே தங்கிவிட முடியும்” என்று சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அச்சுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Doncaster – Vijay Mundrathi from India attempted to sexually abuse a 13-year-old British girl. Caught by British patriots. Vijay bought an engagement ring and gifts for her. He told the girl, “I want to make you pregnant so I can stay in the UK.” What punishment does he deserve? pic.twitter.com/XhbSOa4kob
— Shunya (@Shunyaa00) April 25, 2026
விஜய்யின் இந்தத் திட்டத்தை மோப்பம் பிடித்த ‘பிரிட்டிஷ் தேசப்பற்றாளர்கள்’ என்ற குழுவினர், அவரை கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “சுயநலத்திற்காக ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சிதைக்கத் துணிந்த இவனுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வெளிநாடுகளில் தங்குவதற்காகச் சட்டவிரோத வழிகளைத் தேடுபவர்களின் கொடூர மனநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
