ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், வெயிலில் இருந்து தப்பிக்க நினைத்த ஒரு இளைஞர் செய்த வினோதமான காரியம் அவருக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மாதோகர் கிராமத்தைச் சேர்ந்த காலுராம் என்ற இளைஞர், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தனது தலையைப் பாதுகாக்க 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பழைய பால் கேனை தனது தலையில் கவிழ்த்துக்கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேன் அவரது தலையில் மிக இறுக்கமாகச் சிக்கிக் கொண்டது.
In a bizarre incident in Madhogarh village, Rajasthan, a man ended up with a milk can stuck on his head while trying to beat the heat and shoot a reel. Locals eventually removed it after much effort, and the video has since gone viral.#Rajasthan #ViralVideo #BizarreNews… pic.twitter.com/uAfpJZ9Qej
— IndiaToday (@IndiaToday) April 25, 2026
சுமார் இரண்டு மணி நேரமாகத் தனது தலையில் இருந்து கேனை அகற்ற அவர் போராடியும், அது முடியாமல் போனது. கேனின் எடையால் அவருக்குக் கழுத்து வலி மற்றும் மயக்கம் ஏற்படவே, கிராம மக்கள் அவரை அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள கடைக்காரர், ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி, கிரைண்டர் மெஷின் மூலம் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்தக் கேனை வெட்டி எடுத்தார். அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமுமின்றி காலுராம் மீட்கப்பட்டார். இந்த வினோதமான மீட்புப் பணி தொடர்பான வீடியோ இப்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
