ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில், கிரிக்கெட் மைதானங்களில் அரிதாகக் காணப்படும் ‘தடை ஏற்படுத்தியதற்காக அவுட்’ (Obstructing the field) எனும் முறையில் இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி வெளியேற்றப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 5-வது ஓவரில் ரன் ஓட முயன்ற ரகுவன்ஷி, பந்து வீச்சாளர் ஷமி எறிந்த பந்து தன் மீது படுமாறு ஓடியதாகக் கூறி லக்னோ அணி அப்பீல் செய்தது. ரீப்ளேயில் ரகுவன்ஷி வேண்டுமென்றே ஓடும் திசையை மாற்றியதாகக் கருதிய மூன்றாவது அம்பயர் அவருக்கு அவுட் வழங்கினார்.
ANGKRISH RAGHUVANSHI ANGRY ON POOR UMPIRING 🤬 pic.twitter.com/DBJdg9HRP6
— Rohshh45 (@rohitfc58737) April 26, 2026
இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்த ரகுவன்ஷி, களத்திலேயே தனது பேட்டை தரையில் அடித்து, ஹெல்மெட்டை கழற்றி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கேகேஆர் கேப்டன் அஜிங்கியா ரஹானே உட்பட மற்ற வீரர்களும் இந்த முடிவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த கொல்கத்தா அணி, 5 ஓவர் முடிவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. லக்னோ பந்துவீச்சாளர் மோக்சின் கான் மற்றும் முகமது ஷமியின் துல்லியமான பந்துவீச்சால் கொல்கத்தா அணி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
