சத்தீஸ்கர் மாநிலத்தில் மனிதாபிமானத்தையும், அதே சமயம் வறுமையின் உச்சத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு நபரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலில், ஆம்புலன்ஸ் வசதியோ அல்லது வாகன வசதியோ இல்லாததால் அந்த நபர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

தனது பைக்கின் பக்கவாட்டில் ஒரு கட்டிலை இணைத்து, அதை ஒரு நடமாடும் ஆம்புலன்ஸ் போல மாற்றியுள்ளார். மனைவியின் மருத்துவச் செலவுக்காகத் தனது வீட்டில் இருந்த நகைகள், பாத்திரங்கள் மற்றும் சேமித்து வைத்திருந்த தானியங்கள் என அனைத்தையும் அவர் விற்றுவிட்டார்.

 

அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், தனது மனைவியைக் காப்பாற்றத் தன்னிடம் இருந்த ஒரு வாகனத்தை ஆம்புலன்ஸாக மாற்றி, அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். “கடவுளே.. இவ்வளவு பெரிய வறுமையையும், கையறு நிலையையும் யாருக்கும் கொடுத்துவிடாதே” என்று இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் கண்ணீர் மல்கக் கமெண்ட் செய்து வருகின்றனர்.