சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம்மை அப்படியே திகைக்க வைத்துவிடும். அப்படியொரு பகீர் வீடியோதான் தற்போது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் சிறிதும் பயமின்றி குதித்து தண்ணீருக்குள் ஓடுகிறான்.
அவனைப் பார்த்ததும் ஒரு ராட்சத முதலை மெதுவாக வெளியே வருகிறது. ‘தண்ணீர்க்குள் இருக்கும் எமன்’ என்று அழைக்கப்படும் முதலையைக் கண்டால் மனிதர்கள் அலறியடித்து ஓடுவார்கள்.
ஆனால், அந்தச் சிறுவனோ அசால்ட்டாக அந்த முதலையின் அருகே சென்று, அதன் வாயைத் திறந்து தனது கைகளால் பல் தேய்த்து விடுகிறான்.
அதையெல்லாம் விட ஆச்சரியம் என்னவென்றால், அந்த முதலை அந்தச் சிறுவனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஒரு வளர்ப்புப் பிராணி போல அமைதியாகப் பல் தேய்த்துக் கொள்கிறது.
View this post on Instagram
@thebarpetathings என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது நிஜம்தானா? அல்லது டெக்னாலஜி மேஜிக்கா?” என வாயடைத்துப் போயுள்ளனர்.
அதே சமயம், சிறுவனின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு சிலர் சிரித்தாலும், இது போன்ற ஆபத்தான காரியங்களைச் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
