வயல்வெளியில் டிராக்டர் உழுது கொண்டிருந்தபோது, தனது முட்டைகளைக் காப்பாற்ற ஒரு சிறிய பறவை டிராக்டருக்கு முன்னால் அச்சமின்றி நின்ற காட்சி காண்போரின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. வழக்கம்போல் வயலை உழுது கொண்டிருந்த டிராக்டர் ஓட்டுநர், தனது முட்டைகளைப் பாதுகாக்க அந்தப் பறவை இறக்கைகளை விரித்து சத்தமிட்டபடி போராடியதைக் கவனித்தார்.
அந்தச் சிறிய உயிரின் அதீத தைரியத்தையும், தாய்மையின் அன்பையும் உணர்ந்த ஓட்டுநர், உடனடியாக டிராக்டரை நிறுத்தினார். பின்னர், அந்தப் பறவையின் கூட்டைப் பத்திரமாக எடுத்துப் பாதுகாப்பான இடத்தில் வைத்தார்.
தன்னையும் விட பல மடங்கு பெரிய டிராக்டருக்கு முன்னால் எதையும் பொருட்படுத்தாமல் குஞ்சுகளுக்காக அந்தப் பறவை நின்ற விதம், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை அழகாக எடுத்துரைக்கிறது.
View this post on Instagram
“>
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அந்த டிராக்டர் ஓட்டுநருக்கும், தாய்ப்பறவையின் வீரத்திற்கும் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தாய்மைக்கு மொழி தேவையில்லை என்பதை மெய்ப்பிக்கும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம், இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
