மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பின்னால் ஒரு நபர் அமர்ந்திருக்க, அந்தச் சிறுவன் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே ஆட்டோவை லாவகமாக ஓட்டிச் செல்கிறான். இந்த ஆபத்தான செயலைக் கண்ட பொதுமக்கள், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

சிறுவர்களிடம் வாகனத்தைக் கொடுப்பது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட வாகட் பகுதி போலீசார், அந்த ஆட்டோ ஓட்டுநரைக் கண்டறிந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தான் செய்தது மிகப்பெரிய தவறு என்று ஒப்புக்கொண்ட அந்த ஓட்டுநர், “யோசிக்காமல் சிறுவனிடம் ஆட்டோவை கொடுத்துவிட்டேன், யாரும் இதுபோல விதிகளை மீற வேண்டாம்” என்று வீடியோ மூலம் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“>

 

உரிமம் இல்லாதவர்கள் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற சம்பவங்களைக் கண்டால் பொதுமக்கள் உடனே புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.