சமூக ஊடகங்களில் வெளியாகும் விபத்து வீடியோக்கள் பல நேரங்களில் நமக்கு ஒரு பாடமாக அமைகின்றன. அந்த வகையில், இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் உள்ள சுங்கை பெனு என்ற இடத்தில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து பார்ப்போரை அதிர வைத்துள்ளது.
லாரியில் இருந்து சிலிண்டர்களைக் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் தவறி விழுந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இருந்த அனைத்து சிலிண்டர்களும் சரிந்து விழுந்து பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின்போது அங்கிருந்த ஒருவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பிக்க அங்குமிங்குமாக ஓடும் காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன.
இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எல்பிஜி சிலிண்டர்களைக் கையாளும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் முறையான பயிற்சி இல்லாததே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
View this post on Instagram
“>
‘அதிவேகம் ஆபத்து’ என்பதற்கு இணங்க, அவசர கதியில் வேலை செய்ததே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சிலிண்டர்களைக் கையாளுவதில் கூடுதல் விழிப்புணர்வு தேவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. இது தொடர்பாகத் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
