இன்றைய இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக எதையும் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிளின் ஹேண்டில் பாரை பிடிக்காமல், சீட்டின் மீது நின்றபடி கைகளை வீசி நடனமாடுகிறார்.
चलती बाइक पर युवक डांस करता नजर आया, वीडियो सोशल मीडिया पर वायरल।#ViralVideo #BikeStunt #RoadSafety #TrafficRules pic.twitter.com/el119tT5iD
— NBT Hindi News (@NavbharatTimes) April 22, 2026
சாலையில் மற்ற வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே, எவ்வித அச்சமும் இன்றி அவர் செய்யும் இந்த விபரீதச் செயல் மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. “ரீல்ஸ் எடுக்கிறேன் பேர்வழி எனத் தனது உயிரையும், மற்றவர்களின் உயிரையும் இந்த இளைஞர் பணயம் வைக்கிறார்” என வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய அந்த இளைஞரைக் கண்டுபிடித்து அபராதம் விதிக்கவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை தீவிரமாக முயன்று வருகிறது.
