பசி என்று வந்தவர்களுக்கு அன்போடு உணவு பரிமாறிய ஒரு பெண் ஊழியருக்கு, ஒரு கும்பல் செய்த கைமாறு ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒரு உணவகத்தில் மதிய உணவிற்காக வந்த இளைஞர்கள் குழு ஒன்று, வயிறாரச் சாப்பிட்டுவிட்டு பில் கொடுப்பதில் காலதாமதம் செய்துள்ளது.

அந்தப் பெண் ஊழியர் வேலையில் மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, யாருக்கும் தெரியாமல் அந்த வாலிபர்கள் நைசாகக் கடையை விட்டு நழுவியுள்ளனர். அவர்கள் பில் கட்டாமல் சென்றதை அறிந்த அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

 

அந்த இளைஞர்கள் செய்த தவறால், ஹோட்டல் நிர்வாகம் அந்த மொத்த பில் தொகையையும் அந்தப் பெண் ஊழியரின் தலையிலேயே கட்டியுள்ளது. சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அந்தப் பெண், வேறு வழியின்றி தனது சொந்த பணத்தை எடுத்து அந்த பில் தொகையைச் செலுத்தியுள்ளார்.

“பசி என்று கேட்டவர்களுக்குச் சோறு போட்டது ஒரு தப்பா?” என்று அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கேட்கும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அந்த ஏமாற்றுப் பேர்வழிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.