​சோளிங்கரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில் பேசுவதை மக்களுக்குப் புரியும் வகையில் தமிழில் மொழிபெயர்க்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மேடையில் இருந்தார். ஆனால், ராகுல் காந்தி ஒரு கருத்தைச் சொல்ல, செல்வப்பெருந்தகை அதற்குச் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு கருத்தைத் தமிழில் கூற, மேடையிலேயே ஒரு கணம் குழப்பம் ஏற்பட்டது.

ராகுல் காந்தியின் தீவிரமான பேச்சை, செல்வப்பெருந்தகையின் தவறான மொழிபெயர்ப்பு காமெடியாக மாற்றிய இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், “ராகுல் காந்திக்கு ஒரு நல்ல டிரான்ஸ்லேட்டரை நியமிக்கக் கூடக் கட்சியில் ஆள் இல்லையா?” என விமர்சித்து வருகின்றனர். சீரியஸான அரசியல் கூட்டத்தை, மொழிபெயர்ப்பு குளறுபடியால் கலகலப்பாக்கிய இந்த வீடியோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாக அமைந்துள்ளது.